போக்குவரத்து மிகுந்த சாலையில் விபத்து அபாயம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
புவனகிரி-புவனகிரி பஸ் நிலையம் எதிரில் குடிநீர் பாதுகாப்பு மூடி உடைந்ததை சரி செய்யாததால் விபத்து அதிகரித்து வருகிறது.சிதம்பரம்-கடலுார் சாலையில் புவனகிரி பஸ் நிலையம் எதிரில் குடிநீர் தொட்டிக்கான வால்வு அமைத்த இடத்தில் மூடியிருந்த காங்கிரீட் தடுப்பு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் உடைந்து சேதமடைந்தது. அவற்றை சரி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பஸ்

புவனகிரி-புவனகிரி பஸ் நிலையம் எதிரில் குடிநீர் பாதுகாப்பு மூடி உடைந்ததை சரி செய்யாததால் விபத்து அதிகரித்து வருகிறது.சிதம்பரம்-கடலுார் சாலையில் புவனகிரி பஸ் நிலையம் எதிரில் குடிநீர் தொட்டிக்கான வால்வு அமைத்த இடத்தில் மூடியிருந்த காங்கிரீட் தடுப்பு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் உடைந்து சேதமடைந்தது. அவற்றை சரி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் விழுந்து காயமடைகின்றனர். இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X