ஜூவல் ஒன் நிறுவனத்தின் நிர்ஜரா கலெக்ஷன் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூவல் ஒன் நிறுவனத்தின் 'நிர்ஜரா' கலெக்ஷன் அறிமுகம்

Added : செப் 04, 2021
Share
கோவை:எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின், சில்லரை வர்த்தக பிராண்டான ஜூவல்ஒன் சார்பில், 'நிர்ஜரா' என்ற நீர்வீழ்ச்சி போன்ற, பிரத்யேக வைர நகை கலெக் ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புதிய வைர நகை லோகோ மற்றும் கலெக்ஷனை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள, ஜூவல்ஒன் கிளையில்
 ஜூவல் ஒன் நிறுவனத்தின் 'நிர்ஜரா' கலெக்ஷன் அறிமுகம்

கோவை:எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின், சில்லரை வர்த்தக பிராண்டான ஜூவல்ஒன் சார்பில், 'நிர்ஜரா' என்ற நீர்வீழ்ச்சி போன்ற, பிரத்யேக வைர நகை கலெக் ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புதிய வைர நகை லோகோ மற்றும் கலெக்ஷனை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள, ஜூவல்ஒன் கிளையில் அறிமுகப்படுத்தினர்.எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், ''கலை நயமுடன் தொழில்நுட்பத்தையும் இணைத்து, இத்துறையில் புரட்சியை உருவாக்கியுள்ளோம்,'' என்றார்.தலைமை செயல் அதிகாரி வைத்தீஸ்வரன் கூறுகையில்,''நீர்வீழ்ச்சியின் அழகை அடிப்படையாக கொண்டு, தேர்ச்சி பெற்ற கலைஞர்களால், 'நிர்ஜரா' உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையின் வடிவமைப்பும், இயற்கை அழகை வெளிப்படுத்துவதாக அமையும். சமீபத்தில் நாங்கள், 'அயானா' கலெக்ஷன் என்ற பெயரில் மலர்களை அடிப்படையாக கொண்டு அறிமுகப்படுத்திய தங்க நகை ஆபரணங்கள், பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதே வரிசையில் இந்த 'நிர்ஜரா' வைர நகை கலெக்ஷனும், வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X