பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.25 ஆயிரம் கோடிக்கு மது வகைகள் காப்பீடு

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட உள்ள 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகளை காப்பீடு செய்ய, 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 18 நிறுவனங்களிடம் இருந்து, பீர் மற்றும் மது வகைகளை கொள்முதல் செய்கிறது. மது ஆலைகளில் உற்பத்தியாகும் மது வகைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள, 43 டாஸ்மாக் கிடங்குகளில்

சென்னை:கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட உள்ள 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகளை காப்பீடு செய்ய, 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 18 நிறுவனங்களிடம் இருந்து, பீர் மற்றும் மது வகைகளை கொள்முதல் செய்கிறது. மது ஆலைகளில் உற்பத்தியாகும் மது வகைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள, 43 டாஸ்மாக் கிடங்குகளில் வைக்கப்படுகின்றன.

எந்நேரமும் கிடங்குகளில், 702 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து தேவைக்கு ஏற்ப கடைகளுக்கு 'சப்ளை' செய்யப்படுகின்றன. கிடங்குகளில் வைக்கப்படும் மது வகைகளுக்கு, தீ விபத்து, கொள்ளை போன்ற சம்பவங்களால் சேதம் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பை சமாளிக்க ஆண்டுதோறும் காப்பீடு செய்யப்படுகிறது.

அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள காப்பீட்டு காலம், அடுத்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நவ., 1 முதல் 2022 அக்., வரை, கிடங்குகளில் வைக்கப்பட உள்ள 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் காப்பீடு செய்யப்பட உள்ளன. அதற்காக, தகுதியான பொது காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X