பொது செய்தி

தமிழ்நாடு

மளிகை தொகுப்பை எடுக்க ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் வாங்காமல் தேங்கியுள்ள மளிகை தொகுப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு கொரோனா கால நிவாரணமாக, ஜூனில் 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை வழங்கியது. அவற்றை 1.83 லட்சம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை.அந்த மளிகை தொகுப்பில், நல்ல நிலையில் உள்ள

சென்னை:ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் வாங்காமல் தேங்கியுள்ள மளிகை தொகுப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு கொரோனா கால நிவாரணமாக, ஜூனில் 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை வழங்கியது. அவற்றை 1.83 லட்சம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை.அந்த மளிகை தொகுப்பில், நல்ல நிலையில் உள்ள பொருட்களை எடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளை உணவு துறை சமீபத்தில் அறிவுறுத்தியது.இன்னும் பல கடைகளில் மளிகை தொகுப்பு எடுக்கப்படாமல் உள்ளது.

இது குறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:பொங்கல் சமயத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய பொருட்களை சில கார்டுதாரர்கள் வாங்கவில்லை. அவை, காலாவதியான நிலையில், அதற்கு உரிய தொகையை அதிகாரிகள், ரேஷன் ஊழியர்களிடம் வசூலித்தனர்.

அதேபோல், மத்திய அரசு வழங்கிய கொண்டை கடலையும், கார்டுதாரர்கள் வாங்கியது போக மீதமானதை திரும்ப பெறவில்லை. அவையும் பயன்படுத்த முடியாத நிலையில், அதற்கான பணம் ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்டது.எனவே, தற்போது தேங்கியுள்ள மளிகை தொகுப்பை, விரைந்து திரும்ப பெற நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X