பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை உள்ளதால், பொது மக்களுக்கு சிலைகளை விற்கக் கூடாது என டி.எஸ்.பி., மோகன், சிலை தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் டி.எஸ்.பி., மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஆதி, சிலை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

விருத்தாசலம்-பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை உள்ளதால், பொது மக்களுக்கு சிலைகளை விற்கக் கூடாது என டி.எஸ்.பி., மோகன், சிலை தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் டி.எஸ்.பி., மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஆதி, சிலை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் டி.எஸ்.பி., பேசுகையில், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு சிலைகளை விற்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.பண்ருட்டிபண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., நகர செயலர் கனகராஜ், இந்து மக்கள் கட்சி தேவா, இந்து முன்னணி ரவிசந்திரன், காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடை விதித்துள்ளதால் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.சேத்தியாத்தோப்பு சேத்தியாத்தோப்பு கே.பி.டி., மகாலில் நடந்த கூட்டத்திற்கு, டி.எஸ்.பி., சுந்தரம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். விதிமுறை மீறி சிலை வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X