ரோட்டை தோண்டி கலெக்டர் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டை தோண்டி கலெக்டர் ஆய்வு

Added : செப் 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட ரோடு, அரசு நிர்ணயித்துள்ள விகிதாச்சார அளவீட்டில் உள்ளதா, என, கலெக்டர் பரிசோதித்தார்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சமீரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிணத்துக்கடவு, வடசித்துார் -- பனப்பட்டி வரை, 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை,
 ரோட்டை தோண்டி கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட ரோடு, அரசு நிர்ணயித்துள்ள விகிதாச்சார அளவீட்டில் உள்ளதா, என, கலெக்டர் பரிசோதித்தார்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சமீரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிணத்துக்கடவு, வடசித்துார் -- பனப்பட்டி வரை, 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை, தாளக்கரை பகுதியில் மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது, அரசு நிர்ணயித்துள்ள விகிதாச்சார அளவீட்டில் ரோடு அமைக்கப்பட்டுள்ளதா என, குழிதோண்டச் சொல்லி பரிசோதித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X