கம்மாபுரம் ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்மாபுரம் ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 04, 2021
Share
விருத்தாசலம்-கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேற்று ஆய்வு செய்தார்.கம்மாபுரம் ஒன்றியம் ஊ.மங்கலம் கிராமத்தில் நடக்கும் பசுமை வீடு கட்டும் பணி, ஊத்தாங்கால் கிராமத்தில் சுவட்ச் பாரத் திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணி, இருப்புக்குறிச்சி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பணி,

விருத்தாசலம்-கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேற்று ஆய்வு செய்தார்.கம்மாபுரம் ஒன்றியம் ஊ.மங்கலம் கிராமத்தில் நடக்கும் பசுமை வீடு கட்டும் பணி, ஊத்தாங்கால் கிராமத்தில் சுவட்ச் பாரத் திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணி, இருப்புக்குறிச்சி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பணி, கோ.ஆதனுார் கிராமத்தில் ஊராட்சி கட்டடம், சாலைப் பணி ஆகியவற்றை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், பி.டி.ஓ.,க்கள் இந்திராதேவி, காமராஜ் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X