பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற தொழிலாளர்ளுக்கு வீட்டு மனை

Added : செப் 05, 2021
Share
Advertisement
நெய்வேலி-ஓய்வு பெற்ற என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு 5 சென்ட் நிலம் வழங்கி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் நகர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை என்.எல்.சி.,சேர்மன் ராகேஷ்குமாரிடம் பா.ஜ.,வினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.இது குறித்து அகில இந்திய பிற்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளரும் பா.ஜ., பிரமுகருமான வீரவன்னிய ராஜா தலைமையிலான பா.ஜ.,வின் கம்மாபுரம்

நெய்வேலி-ஓய்வு பெற்ற என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு 5 சென்ட் நிலம் வழங்கி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் நகர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை என்.எல்.சி.,சேர்மன் ராகேஷ்குமாரிடம் பா.ஜ.,வினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.இது குறித்து அகில இந்திய பிற்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளரும் பா.ஜ., பிரமுகருமான வீரவன்னிய ராஜா தலைமையிலான பா.ஜ.,வின் கம்மாபுரம் ஒன்றிய தலைவர் தயாநிதி, நெய்வேலி நகர செயலாளர் வீரவன்னிய வேங்கன், தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமாரிடம் அளித்த மனு: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக வீடு, நிலங்களை வழங்கியவர்கள் குடும்பத்திற்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். என்.எல்.சி.,யில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கொரோனா தொற்று காரணமாக இறந்த என்.எல்.சி., பணியாளர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கி, அந்த இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் நகர் அமைக்க வேண்டும். நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள என்.எல்.சி., பஸ் நிலையத்திற்கு ஜம்புலிங்க முதலியார் பெயரை சூட்டவேண்டும். 20 ஆண்டுகளாக என்.எல்.சி.,யில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.நெய்வேலி விமான நிலையத்திற்கு ராமசாமி படையாச்சியார் பெயரை சூட்ட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X