தாழம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாழம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 05, 2021
Share
பண்ருட்டி-பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கிராமத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை பயிரில் விதை நேர்த்தி முதல் அறுவடை மற்றும் அறுவடைக்குப் பின் விதை சேமித்தல், விதைப் பண்ணை அமைத்தல், விதை உற்பத்தி, இயற்கை மற்றும் ரசாயன உரமிடல், பூச்சி நோய்

பண்ருட்டி-பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கிராமத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை பயிரில் விதை நேர்த்தி முதல் அறுவடை மற்றும் அறுவடைக்குப் பின் விதை சேமித்தல், விதைப் பண்ணை அமைத்தல், விதை உற்பத்தி, இயற்கை மற்றும் ரசாயன உரமிடல், பூச்சி நோய் நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகசாமி பங்கேற்று பயிற்சியளித்தார். வேளாண்மை துறை திட்டங்கள், இடுபொருட்கள் இருப்பு குறித்து உதவி வேளாண்மை அலுவலர் சங்கரநாராயணன் விளக்கமளித்தார்.ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் சவுந்தரராஜன், இளையராஜா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X