பொது செய்தி

தமிழ்நாடு

கேபிள் நிலுவை கட்டணம் ஆப்பரேட்டர்களுக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 05, 2021
Share
Advertisement
கட்டண பாக்கியை விரைவாக செலுத்தக் கோரி ஆப்பரேட்டர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ள ஆப்பரேட்டர்கள், 'செட் டாப் பாக்ஸ்' வாங்கி, மக்களுக்கு வழங்கினர். அரசு செட் டாப் பாக்ஸ் வருவாய் குறைந்ததால், தனியார் செட் டாப் பாக்ஸ் விற்பனையை கையில் எடுத்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற

கட்டண பாக்கியை விரைவாக செலுத்தக் கோரி ஆப்பரேட்டர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ள ஆப்பரேட்டர்கள், 'செட் டாப் பாக்ஸ்' வாங்கி, மக்களுக்கு வழங்கினர். அரசு செட் டாப் பாக்ஸ் வருவாய் குறைந்ததால், தனியார் செட் டாப் பாக்ஸ் விற்பனையை கையில் எடுத்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மாநிலம் முழுதும் பயன்பாடின்றி இருந்த செட் டாப் பாக்ஸ் திரும்ப பெறப்பட்டன.

கேபிள் 'டிவி' நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அரசு செட் டாப் பாக்ஸ் வாங்கிய ஆப்பரேட்டர்கள் பலர், கட்டணத்தை முழுமையாக செலுத்தாமல் இருக்கின்றனர். 'மாவட்டந் தோறும், 50 லட்சம் முதல், 70 லட்சம் ரூபாய் வரை கட்டண பாக்கி உள்ளது. பாக்கியை வசூலிக்க, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. குறித்த நாட்களில் பணத்தை செலுத்தாவிட்டால், 'ஜப்தி' நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X