பொது செய்தி

தமிழ்நாடு

வரி செலுத்தாதவர்கள் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடலுார் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி பல கோடிக்கு பாக்கி வைத்துள்ளனர்.புதியதாக

கடலுார்-கடலுார் நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடலுார் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி பல கோடிக்கு பாக்கி வைத்துள்ளனர்.புதியதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வரி பாக்கியை வசூலிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வாடகை உள்ளிட்டவைகளை முறையாக செலுத்த வேண்டும், இல்லையெனில் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்தார்.வீடு வீடாக சென்று வரி வசூல் செய்ய உத்தரவிட்டதால் அதிகாரிகள் வசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். வரி செலுத்தாதவர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டித்து வருகின்றனர்.இதில் 18 வது வார்டில் ரூ.1.40 கோடிக்கு வரி பாக்கி உள்ள நிலையில் நேற்று நகராட்சி அதிகாரிகள் துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சீத்தாரம் நகரில் ஒரு சில வீடுகளில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அச்சமடைந்த பலரும் வரியை செலுத்தினர். மேலும் பலர் அவகாசம் கேட்டதையடுத்து, எச்சரித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X