பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்ய 26 குழுக்கள் அமைப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
கடலுார்-ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலியாக, மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் ஆய்வு மேற்கொள்ள 26 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. அரசு உத்தரவுபடி, கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி,

கடலுார்-ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலியாக, மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் ஆய்வு மேற்கொள்ள 26 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. அரசு உத்தரவுபடி, கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி, கல்லுாரிகள் துவங்கி 4 நாட்களுக்குள் கடலுார், நெய்வேலி, வேப்பூர் என, 4 பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி கல்லுாரிகள் நோய் தடுப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா, ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா, சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்ய, 26 மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ஆசிரியர்கள், மாணவர்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை பாதித்தால் கொரோனா பரிசோதனை எடுத்து, முடிவு வரும் வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு வரவேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு 2 குழுக்கள் வீதம், 13 ஒன்றியங்களில் 26 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தலைமையில் செவிலியர், உதவியாளர் உட்பட 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், பள்ளி, கல்லுாரிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மழைக்காலம் என்பதால், பள்ளி, கல்லுாரி வளாகத்தை சுகாதாரமாக, தண்ணீர் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விட்டமின் குறைபாடு உள்ளதா என கண்டறிந்து மருந்து வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருவதால், பெற்றோர் அச்சப்பட வேண்டாம். வழக்கம் போல் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X