புதிய வோக்ஸ்வாகன் டைகுன் கோவைக்கு அரிய வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வோக்ஸ்வாகன் டைகுன் கோவைக்கு அரிய வாய்ப்பு

Added : செப் 05, 2021
Share
புதிய வோக்ஸ்வாகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி., செப். 23ல் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் முன்னோட்டம் இன்று கோவையில் நடக்கிறது. இதன் முக்கிய அம்சங்களை அறிய ரமணி கார்ஸ் ஷோரூமை வாடிக்கையாளர்கள் 'விசிட்' பண்ணலாம்.புதுப்பொலிவுடன் களமிறக்கப்படும் டைகுன் காரில், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஹனிகோம்ப் கிரில் அமைப்பு, 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில்
 புதிய வோக்ஸ்வாகன் டைகுன்  கோவைக்கு அரிய வாய்ப்பு

புதிய வோக்ஸ்வாகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி., செப். 23ல் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் முன்னோட்டம் இன்று கோவையில் நடக்கிறது. இதன் முக்கிய அம்சங்களை அறிய ரமணி கார்ஸ் ஷோரூமை வாடிக்கையாளர்கள் 'விசிட்' பண்ணலாம்.புதுப்பொலிவுடன் களமிறக்கப்படும் டைகுன் காரில், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஹனிகோம்ப் கிரில் அமைப்பு, 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் பேடு, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (113 பிஎச்பி பவர், 175 என்எம் டார்க் திறன்), 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்(148 பிஎச்பி பவர், 250 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் ஆப்ஷன் உண்டு. 6 ஸ்பீடு மேனுவல்/ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்/7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.வோக்ஸ்வாகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,''பெங்களூரு, சென்னைக்கு பிறகு இந்தியாவில் மூன்றாவது நகரமாக கோவையில் டைகுன் காரின் பிரத்யேக முன்னோட்டம் நடக்க உள்ளது. செப். 23ல் அறிமுகமாக இருக்கும் இக்காரின் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்கள் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். தற்போது முன்பதிவு நடக்கிறது,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X