பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 25 லட்சம் நிவாரணம்: அரசு அலுவலர் கோரிக்கை

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஆனைமலை:'கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள அரசு ஊழியர்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையாக அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டம், ஆனைமலையில், நேற்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், அலுவலக திறப்பு விழா நடந்தது. சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தலைமை
 ரூ. 25 லட்சம் நிவாரணம்: அரசு அலுவலர் கோரிக்கை

ஆனைமலை:'கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள அரசு ஊழியர்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையாக அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டம், ஆனைமலையில், நேற்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், அலுவலக திறப்பு விழா நடந்தது. சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தலைமை வகித்தார்.மாநிலத்தலைவர் சண்முக ராஜன் பேசியதாவது:புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணியாற்றும், சிறப்பு கால முறை ஊதியம் பெறுவோருக்கு, காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த, அனைத்து முன்கள அரசு ஊழியர்களுக்கும் தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையாக அரசு விரைவில் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X