பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி பலியாகும் யானைகள்: மத்தியக்குழு ஆய்வு

Added : செப் 05, 2021
Share
Advertisement
கோவை:ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து மத்திய குழுவினர் பாலக்காடு - மதுக்கரை இடையேயான ரயில்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த, 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மோதியதில், 186 யானைகள் உயிரிழந்தன. ரயில் மோதி யானைகள் பலியாவது குறித்து ஆய்வு செய்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறப்புக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.பாலக்காடு - மதுக்கரை இடையேயான

கோவை:ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து மத்திய குழுவினர் பாலக்காடு - மதுக்கரை இடையேயான ரயில்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த, 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மோதியதில், 186 யானைகள் உயிரிழந்தன. ரயில் மோதி யானைகள் பலியாவது குறித்து ஆய்வு செய்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறப்புக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.பாலக்காடு - மதுக்கரை இடையேயான பகுதியில் ரயில் மோதியதில் அதிகளவு யானைகள் உயிரிழந்தது குறித்து மத்தியக் குழுவினர் நேற்றுஆய்வு மேற்கொண்டனர். விஞ்ஞானி செல்வன், மத்திய சுற்றுசூழல் துறை யானைகள் திட்ட பிரிவு அலுவலர் பிரஜ்னா பாண்டா மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். ரயில்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தெரிவிக்கப்படும்' என்றனர்.கோவை மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X