பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர் விருதுக்கு மாவட்டத்தில் 11 பேர் தேர்வு

Added : செப் 05, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தினத்தையொட்டி, ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கடலுார் மாவட்டத்தில் 11 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சிதம்பரம் அருகே பூவலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தினத்தையொட்டி, ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கடலுார் மாவட்டத்தில் 11 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சிதம்பரம் அருகே பூவலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை நவஜோதி, கடலுார் புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வெற்றிவேல், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் மோகன் குமார் தேர்வு செய்யப்பட்டனர்.சிதம்பரம் தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரவி, புவனகிரி கத்தாழை ஊராட்சி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கார்த்திக் ராஜா, சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா, நெல்லிக்குப்பம் சித்தரசூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சாம் விக்டர் மதன்லால் தேர்வாகியுள்ளனர்.குமராட்சி முள்ளங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதா, குறிஞ்சிப்பாடி பூண்டியாங்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை சோபனா ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X