பொது செய்தி

தமிழ்நாடு

'திராவிட களஞ்சியத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்'

Added : செப் 05, 2021
Share
Advertisement
கரூர்:'' சங்க கால இலக்கியங்களை, திராவிட களஞ்சியம் என தொகுத்து வழங்க, தமிழ் அமைப்புகள் மறுப்பு தெரிவிக்க வேண்டும்,'' என, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.கரூரில் அவர் கூறியதாவது:தமிழுக்கு வலுவூட்டும் வகையில், தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்பதை வரவேற்கிறோம்.அர்ச்சகர் பணியில்

கரூர்:'' சங்க கால இலக்கியங்களை, திராவிட களஞ்சியம் என தொகுத்து வழங்க, தமிழ் அமைப்புகள் மறுப்பு தெரிவிக்க வேண்டும்,'' என, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.கரூரில் அவர் கூறியதாவது:தமிழுக்கு வலுவூட்டும் வகையில், தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்பதை வரவேற்கிறோம்.அர்ச்சகர் பணியில் குறைகள் இருந்தால் மீண்டும், உரிய புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு சரி செய்யப்படும். அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கட்டாயம் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. அதற்காக பாராட்டுகிறோம்.சங்க கால இலக்கியங்களை, 'திராவிட களஞ்சியம்' என்ற பெயரில் தொகுத்து வெளியிட, தமிழ் அமைப்புகள் கலந்து பேசி மறுப்பு தெரிவிக்க வேண்டும். இலக்கியத்தில் எந்த இடத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இருப்பதாக எதுவும் இல்லை. அந்த காலத்தில், ஒன்றாக இருப்பர் என்ற நம்பிக்கையில் திராவிடம் என சொல்லி இருக்கலாம். ஆனால், ஒன்றாக இருப்பது இல்லை.நமக்குள் தான் எல்லா சண்டைகளும் வருகின்றன. இதனால், தமிழர் என்ற தனித் திருத்தம் வேண்டும் என்பதே தமிழ் சான்றோர்களின் கருத்தாகும்.மதுரை ஆதீனம் தொடர்பாக, சட்ட ரீதியான உரிமை நித்யானந்தாவுக்கு இருக்க வாய்ப்பில்லை. இது குறித்து, நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X