இந்தியா

தடையில்லை புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி.

Added : செப் 05, 2021
Share
Advertisement
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 10ம் தேதி, விநாயகர் சதுார்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழல் உள்ளதால், தமிழகத்தில் இந்தாண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப் பட்டுள்ளது. அதுபோல புதுச்சேரியிலும்
 தடையில்லை  புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 10ம் தேதி, விநாயகர் சதுார்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழல் உள்ளதால், தமிழகத்தில் இந்தாண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப் பட்டுள்ளது. அதுபோல புதுச்சேரியிலும் தடை விதிக்கப்படுமோ என்ற சந்தேகம் நிலவியது.இந்நிலையில், கவர்னர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றும் தொற்று அதிகரிக்கவில்லை.கோவில்களில் மக்கள் கட்டுப்பாட்டுடன் கூடுவதால் தொற்று பரவுவதில்லை.எனவே, பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் பக்தர்களை கோவில்களில் அனுமதிக்கலாம் என்பதற்கு புதுச்சேரி முன் உதாரணமாக உள்ளது.புதுச்சேரியில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி, தெலுங்கானாவில் மிக பிரமாண்டமான விநாயகர் சிலையை நான் திறந்து, பூஜையை துவக்கி வைக்க உள்ளேன்.மக்கள் விழிப்புடன் நடந்து கொள்ளும் போது தடை விதிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க தடை ஏதும் இல்லை.

புதுச்சேரியில், நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஓரிரு தினங்களாக, கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. அதற்காக பயப்பட தேவையில்லை. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.பள்ளிகள் திறந்துள்ளோம். குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால், மூன்றாம் அலை வந்தால் கூட நாம் பயப்படாமல் இருக்க முடியும். ஐ.சி.யூ.,வில் சேராமல் இருக்க வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.இது தேவையில்லாதது. 75 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் ஒட்டுமொத்த எதிர்ப்பு சக்தியும் புதுச்சேரிக்கு கிடைக்கும். அதனால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X