பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்தில் பழமையான கோடாரி

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில்,10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து, புதுக்கோட்டையில் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் உள்ளது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரம் போன்றவற்றை விளக்கும் வகையில், பல்வேறு காலக்கட்டங்களில் வீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்,
 அரசு அருங்காட்சியகத்தில்  பழமையான கோடாரி

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில்,10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து, புதுக்கோட்டையில் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் உள்ளது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரம் போன்றவற்றை விளக்கும் வகையில், பல்வேறு காலக்கட்டங்களில் வீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, மங்கலமேடு பகுதியில்கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் 6ம் வகுப்பு படித்த மாணவனும், தற்போது, தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினராவும் உள்ள திருக்குறள்அரசன் என்பவர் கோடாரி போன்ற பொருளை கண்டெடுத்து, அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.கோடாரியின் காலக்கட்டத்தை கண்டுபிடிப்பதற்காக, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கடந்த 20 தினங்களுக்கு முன் வந்த ஆய்வு முடிவில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மக்கள் பயன்படுத்திய கோடாரி என்பது தெரிய வந்தது.புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் பழமையான பொருட்கள் சிறப்பு கண்காட்சி நடத்தப்படும். இந்த மாத 'ஸ்பெஷல்' வரிசையில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை, ஏராளமான மக்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X