சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் எனக் கூறி ரூ.55 ஆயிரம் அபேஸ்

Added : செப் 05, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம், போலீஸ் போல் நடித்து, 55 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பூபாலன், 54; சென்னையில் உள்ள தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் விசேஷங்களுக்கு அழைப்பிதழ் கார்டு ஆர்டர் எடுப்பது மற்றும் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார்.இவர், நேற்று மதியம், திண்டிவனம்

திண்டிவனம்-திண்டிவனத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம், போலீஸ் போல் நடித்து, 55 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பூபாலன், 54; சென்னையில் உள்ள தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் விசேஷங்களுக்கு அழைப்பிதழ் கார்டு ஆர்டர் எடுப்பது மற்றும் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார்.இவர், நேற்று மதியம், திண்டிவனம் பகுதியில் ஆர்டர் கொடுத்த 2 கடைகளில் 55 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து கொண்டு, திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெரு சந்திப்பு சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது அவரை பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, மிரட்டும் தொனியில், இருவரும் போலீஸ் எனக்கூறி, பேக்கில் கஞ்சா வைத்திருக்கிறாயா எனக் கேட்டு, பூபாலனிடம் இருந்த பேக்கை பறித்து சோதனை செய்துள்ளனர். அதில் ஒன்றுமில்லை என தெரிந்ததும், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்கிறாயா எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.அதற்கு பூபாலன், வசூல் செய்த பணம் எனக்கூறி எடுத்து காட்டியுள்ளார். உடன் அந்த பணத்தைப் வாங்கி, பூபாலனின் பேக்கில் வைப்பது போல் நடித்து, பூபாலனுக்கு தெரியாமல், இருவரில் ஒருவர் அவரது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.பின்னர் இருவரும் பூபாலனிடம், பேக்கை கொடுத்து விட்டு, 'பணத்தை பத்திரமாக எடுத்துச்செல்' என அறிவுரை கூறி விட்டு மர்ம ஆசாமிகள் சென்றனர்.சிறிது துாரம் சென்ற பூபாலன் சந்தேகமடைந்து பேக்கை திறந்து பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் தன்னை ஏமாற்றி, 55 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்தது தெரியவந்தது.இது குறித்து பூபாலன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X