சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை

Added : செப் 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மத்திய புலனய்வுத்துறையினர் இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம், மண்டபம் வரும் தமிழர்கள் எப்படிவெளி மாநிலம், வெளிநாடு செல்கின்றனர். அவர்களுக்கு உதவும் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமேஸ்வரம் மண்டபம், துாத்துக்குடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 23 தமிழர்கள் படகு மூலம் வந்தனர்.

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மத்திய புலனய்வுத்துறையினர் இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரம், மண்டபம் வரும் தமிழர்கள் எப்படிவெளி மாநிலம், வெளிநாடு செல்கின்றனர். அவர்களுக்கு உதவும் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமேஸ்வரம் மண்டபம், துாத்துக்குடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 23 தமிழர்கள் படகு மூலம் வந்தனர். இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக கனடா புறப்பட்டனர். இதில் சிலர் மதுரையில் தங்கியிருந்தபோது புலனாய்வு தனிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தேசிய புலனாய்வுத்துறையினர் விசாரணையில் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் தமிழக கடற்கரைப் பகுதிக்கு அழைத்து வர உதவிய நபர்கள் குறித்து தெரியவந்து உள்ளது.தேசிய புலனாய்வு முகமை சார்பில், ஐதராபாத் பிரிவு ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட 2 பேர் ராமநாதபுரத்துக்கு வந்துள்ளனர்.

இவர்களுடன் உள்ளூர் போலீசார் இணைந்து மண்டபம் முகாம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள நபர்களிடம் இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக வெளிமாநிலம், வெளிநாடு எவ்வாறு செல்கின்றனர் என்பது குறித்து விசாரித்துள்ளனர். கடலோரப் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X