தென்னந்தோப்பில் நுழைந்த காட்டு யானை

Added : செப் 05, 2021
Share
Advertisement
ராம்நகர்-தென்னந்தோப்பில் நுழைந்த காட்டு யானையொன்று, அட்டகாசம் செய்தது. விவசாயிகளின் கண் முன்பே, தென்னை மரத்தை யானை சாய்த்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.ராம்நகரின் பல்வேறு கிராமங்களில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. மக்கள் உயிர் பயத்துடன் நாட்களை கடத்துகின்றனர்.காலை நேரத்தில் வயல், தோட்டங்களுக்கு செல்லவும், கழிப்பிடத்துக்கு செல்லவும் கிராமத்தினர்

ராம்நகர்-தென்னந்தோப்பில் நுழைந்த காட்டு யானையொன்று, அட்டகாசம் செய்தது. விவசாயிகளின் கண் முன்பே, தென்னை மரத்தை யானை சாய்த்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.ராம்நகரின் பல்வேறு கிராமங்களில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. மக்கள் உயிர் பயத்துடன் நாட்களை கடத்துகின்றனர்.காலை நேரத்தில் வயல், தோட்டங்களுக்கு செல்லவும், கழிப்பிடத்துக்கு செல்லவும் கிராமத்தினர் அஞ்சும் சூழ்நிலை உள்ளது.சென்னப்பட்டணாவின் தொட்டனஹள்ளி கிராமத்தில் நேற்று காலை இரண்டு யானைகள் தென்னந்தோப்பில் நுழைந்து அட்டகாசம் செய்தன.தோட்டத்தையே மிதித்து துவம்சம் செய்தன. யானையொன்று தென்னை மரத்தை வேருடன் சாய்த்ததை கண்டு, விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.கிராமத்தினர் கூச்சலிட்டு யானைகளை விரட்ட முயற்சித்தும் பயனில்லை. சில மாதங்களுக்கு முன், இப்பகுதியில் அட்டகாசம் செய்த யானைகளை, வனத்துறையினர் பிடித்து, வனத்துக்குள் விரட்டினர்.ஆனால் இப்போது தெங்கினகல்லு வனப்பகுதியிலிருந்து, யானைகள் வந்து மக்களை அச்சுறுத்துகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X