கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் ஏ.ஜி.,க்கள் நியமனம்: எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Added : செப் 05, 2021
Share
Advertisement
சென்னை;உச்ச நீதிமன்றத்துக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழக அரசு சார்பில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஏழு; மதுரை கிளைக்கு இரண்டு என, ஒன்பது கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக வி.கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த்

சென்னை;உச்ச நீதிமன்றத்துக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழக அரசு சார்பில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஏழு; மதுரை கிளைக்கு இரண்டு என, ஒன்பது கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக வி.கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகியோரை நியமித்து ஆகஸ்ட், 6ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிப்பதற்கு முன், விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்துக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் பதவிகளை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.'சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை, விதிகளை பின்பற்றவில்லை. எனவே, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக இருவரை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகினர். மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பழைய அறிவிப்பாணையின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார். கூடுதல் அட்வகேட் ஜெனரலை நியமிக்க, அரசுக்கு அதிகாரமில்லை என்ற வாதத்தில், எந்த அடிப்படையும் இல்லை. மாநில அரசு சார்பில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்களை நியமிக்க அறிவிப்பாணை அனுமதிக்கிறது. இந்த வழக்கில் தகுதி இல்லை; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X