சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டி எஸ்.பி., முதலிடம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சேலம்:துப்பாக்கி சுடும் போட்டியில், சேலம் எஸ்.பி., முதலிடம் பிடித்தார்.சேலம் ரெட்டியூர் நகரமலையில், 100 அடி அளவில் குடையப்பட்டு, 5 ஏக்கரில் உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து, துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.டி.ஐ.ஜி., மகேஸ்வரி, எஸ்.பி.,க்கள் சேலம் ஸ்ரீஅபிநவ், நாமக்கல் சரோஜ்குமார் தாகூர்,
 துப்பாக்கி சுடும் போட்டி எஸ்.பி., முதலிடம்

சேலம்:துப்பாக்கி சுடும் போட்டியில், சேலம் எஸ்.பி., முதலிடம் பிடித்தார்.

சேலம் ரெட்டியூர் நகரமலையில், 100 அடி அளவில் குடையப்பட்டு, 5 ஏக்கரில் உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து, துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.

டி.ஐ.ஜி., மகேஸ்வரி, எஸ்.பி.,க்கள் சேலம் ஸ்ரீஅபிநவ், நாமக்கல் சரோஜ்குமார் தாகூர், தர்மபுரி கலைச்செல்வன், கிருஷ்ணகிரி சாய்சரண் தேஜஸ்வி, போச்சம்பள்ளி பட்டாலியன் கமாண்டோ பிரிவு பாண்டியராஜன் ஆகியோர், பல சுற்றுகளில் இலக்கை நோக்கி குறி பார்த்து சுட்டனர்.தனித்திறனை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்த சேலம் எஸ்.பி., இரண்டாம் இடம் பிடித்த கிருஷ்ணகிரி எஸ்.பி.,யை, கமிஷனர் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X