பொது செய்தி

இந்தியா

3 மாநகராட்சிகளில் எதிர்பார்த்த ஓட்டுப் பதிவு இல்லை

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவின் மூன்று மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் எதிர்பார்த்த ஓட்டுகள் பதிவாகாததால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.பெலகாவி, ஹுப்பள்ளி - தார்வாட், கலபுரகி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் 195 வார்டுகளுக்கும்; வெவ்வேறு காரணங்களால் காலியான 78 வார்டுகளுக்கும் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.மாலை 5:00 மணிக்கே ஓட்டுப்பதிவு நேரம்

பெங்களூரு-கர்நாடகாவின் மூன்று மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் எதிர்பார்த்த ஓட்டுகள் பதிவாகாததால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.பெலகாவி, ஹுப்பள்ளி - தார்வாட், கலபுரகி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் 195 வார்டுகளுக்கும்; வெவ்வேறு காரணங்களால் காலியான 78 வார்டுகளுக்கும் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.மாலை 5:00 மணிக்கே ஓட்டுப்பதிவு நேரம் முடிந்தாலும், சில ஓட்டுச்சாவடிகளில் வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களுக்கு ஓட்டுப்போடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சில பகுதிகளில் இரவு 8:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.இந்நிலையில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்து, கர்நாடக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெலகாவியின் 58 வார்டுகளில், 50.41 சதவீதமும்; ஹுப்பள்ளி - தார்வாடின் 82 வார்டுகளில், 53.81 சதவீதமும்; கலபுரகியின் 55 வார்டுகளில், 49.40 சதவீதம் வாக்குகளும் பதிவானது.சராசரியாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 60 சதவீத ஓட்டுகள் பதிவாகும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் குறைந்தபட்ச ஓட்டுகள் மட்டுமே பதிவானதால் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.பதிவான ஓட்டுகள், நாளை காலை 8:00 மணியிலிருந்து எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X