கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாயின் பெயரை சான்றிதழில் சேர்க்க தனி இடம் ஒதுக்கக் கோரி வழக்கு

Added : செப் 05, 2021
Share
Advertisement
சென்னை:தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்க்கும் வகையில், ஆவணங்கள், சான்றிதழ், விண்ணப்பங்களில் தனியாக இடம் ஒதுக்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:திருமணம், பிறந்த நாள் விழா, புதுமனை புகுவிழா அழைப்பிதழில், தாய், தந்தை பெயரை

சென்னை:தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்க்கும் வகையில், ஆவணங்கள், சான்றிதழ், விண்ணப்பங்களில் தனியாக இடம் ஒதுக்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:திருமணம், பிறந்த நாள் விழா, புதுமனை புகுவிழா அழைப்பிதழில், தாய், தந்தை பெயரை குறிப்பிடுகிறோம். ஆனால், நிலப்பதிவு ஆவணம், வங்கி ஆவணம், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.நம் நாட்டை தாய் நாடு என்கிறோம்; மொழியை தாய் மொழி என்கிறோம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்படுகிறது. எனவே, சான்றிதழ்கள், ஆவணங்களில் தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்த்து குறிப்பிட, உரிய திருத்தம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X