சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், போட்டியிடும் அவசரம் எனக்கில்லை.

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு-''சிந்தகி, ஹானகல் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், போட்டியிடும் அவசரம் எனக்கில்லை. 2023ன் சட்டசபை தேர்தல் வரை, நான் காத்திருப்பேன்,'' என மாநில பா.ஜ., துணைத்தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:2023 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 18 மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டால், பொதுத்தேர்தலில் என்

பெங்களூரு-''சிந்தகி, ஹானகல் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், போட்டியிடும் அவசரம் எனக்கில்லை. 2023ன் சட்டசபை தேர்தல் வரை, நான் காத்திருப்பேன்,'' என மாநில பா.ஜ., துணைத்தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:2023 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 18 மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டால், பொதுத்தேர்தலில் என் தொகுதியை மாற்றக்கூடும்.பொதுத்தேர்தலில் என் ஆதரவாளர்கள் அடையாளம் காண்பிக்கும் தொகுதியில், நான் போட்டியிடுவேன்.என் தந்தை எடியூரப்பா, சகோதரர் ராகவேந்திரா மற்றும் ஆதரவாளர்களுடன், ஆலோசனை நடத்தி முடிவு செய்வேன்.கடந்த முறை வருணா தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால் கட்சி மேலிடம் வாய்ப்பளிக்கவில்லை. இம்முறை இடைத்தேர்தலில், அது போன்ற தர்ம சங்கடம் ஏற்பட வேண்டாம்.பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள, என் தந்தை எடியூரப்பா முடிவு செய்தார். மாநில பா.ஜ., தலைவரும் கூட, எடியூரப்பாவுடன் இருப்பார்.பசவராஜ் பொம்மை, முதல்வராக இருக்கிறார். எனவே இவரது தலைமையில், அடுத்த தேர்தல் எதிர்கொள்ளப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கலாம்.அவருடன் எனக்கு நல்லுறவு உள்ளது. எடியூரப்பாவும், பொம்மையுடன் சேர்ந்து பணியாற்றுவார். சிலர் தேவையற்ற ஊகங்களை கிளப்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X