பொது செய்தி

இந்தியா

கொரோனா சூழ்நிலையில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு -கொரோனா சூழ்நிலையில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.2021 ---- 22 கல்வியாண்டின், மாணவர் சேர்க்கை ஜூன் 15ல் துவங்கியது. ஆகஸ்ட் 30 கடைசி நாளாக இருந்தது. கர்நாடகாவில் 48 ஆயிரத்து 6 அரசு பள்ளிகள் உள்ளன.நடப்பாண்டு 45 லட்சத்து 56 ஆயிரத்து 131 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 22 ஆயிரத்து 65 தனியார் பள்ளிகள் உள்ளது.

பெங்களூரு -கொரோனா சூழ்நிலையில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.2021 ---- 22 கல்வியாண்டின், மாணவர் சேர்க்கை ஜூன் 15ல் துவங்கியது. ஆகஸ்ட் 30 கடைசி நாளாக இருந்தது. கர்நாடகாவில் 48 ஆயிரத்து 6 அரசு பள்ளிகள் உள்ளன.நடப்பாண்டு 45 லட்சத்து 56 ஆயிரத்து 131 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 22 ஆயிரத்து 65 தனியார் பள்ளிகள் உள்ளது. இவற்றில் 40 லட்சத்து 38 ஆயிரத்து 707 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.நடப்பாண்டு புள்ளி - விபரங்களை, கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை அரசு பள்ளிகளில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 858 மாணவர்கள், கூடுதலாக சேர்ந்துள்ளனர்.இதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.கொரோனா தொற்றால், பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியவில்லை.எனவே அரசு பள்ளிகளுக்கு, பிள்ளைகளை மாற்றுகின்றனர். தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிக்கு பிள்ளைகளை சேர்க்க, இடம் மாற்ற கடிதம் கட்டாயம்.ஆனால் தனியார் பள்ளிகள், கடிதம் கொடுக்க தயங்குகின்றன. பாக்கி கட்டணத்தை செலுத்தாமல் கடிதம் கொடுக்க முடியாது என முரண்டு பிடிக்கின்றன. இதனால் பெற்றோர் தொந்தரவில் சிக்கியுள்ளனர்.தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், மாணவர் சேர்க்கைக்காக நிர்ணயித்திருந்த காலக்கெடுவை, அக்டோபர் 30 வரை நீட்டித்துள்ளன.தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியதாவது:கொரோனா நேரத்தில் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பதால் பெற்றோர் வருத்தமடைந்துள்ளனர்.ஆன்லைன் கல்வியை விட, வித்யாகமா வகுப்புகளே சிறப்பானது, பெற்றோர் கருதுவதே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க காரணம்.தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகள் எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை நாங்கள் நிருபிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X