சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஏட்டு வீட்டில் வாலிபர் அடித்து கொலை

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை:போலீஸ் ஏட்டு வீட்டில் குடியிருந்த வாலிபர் கொலையானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனுாரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 24. இவர், மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு பாண்டித்துரையின் சுற்றுச்சுவர் வீட்டில் வாடகைக்கு தங்கி, பாத்திரக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மாரீஸ்வரன், 25. இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

மதுரை:போலீஸ் ஏட்டு வீட்டில் குடியிருந்த வாலிபர் கொலையானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனுாரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 24. இவர், மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு பாண்டித்துரையின் சுற்றுச்சுவர் வீட்டில் வாடகைக்கு தங்கி, பாத்திரக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மாரீஸ்வரன், 25. இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் மகேஸ்வரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஏட்டு பாண்டித்துரை வந்து பார்த்தபோது, மாரீஸ்வரன் தலையில் அடிபட்டு காயத்துடன் மயங்கி கிடந்தார். போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரன் அறையில் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர்.

போதையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அடித்து தள்ளி விட்டதில் மகேஸ்வரன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரிந்தது; மாரீஸ்வரன் காயமுற்றார். தப்பி ஓடிய நண்பர்களை தேடி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'மாரீஸ்வரன் சுயநினைவின்றி இருப்பதால், அவரிடம் விசாரிக்க முடியவில்லை; உடன் இருந்தவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X