கர்நாடக இளைஞர் காங்கிரசில் ஏற்பட்டிருந்த பனிப்போர், முடிவுக்கு வந்துள்ளது.

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு-கர்நாடக இளைஞர் காங்கிரசில் ஏற்பட்டிருந்த பனிப்போர், முடிவுக்கு வந்துள்ளது. கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதில், இளம் தலைவர்கள் ரக்ஷா ராமையா, முகமது நல்பாட் ஈடுபட்டுள்ளனர்.அதிக ஓட்டுகர்நாடக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்த பின், கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது. அதிக ஓட்டுகள் பெற்ற ரக்ஷா ராமையா, தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பதவிக்கு போட்டியிட்ட

பெங்களூரு-கர்நாடக இளைஞர் காங்கிரசில் ஏற்பட்டிருந்த பனிப்போர், முடிவுக்கு வந்துள்ளது. கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதில், இளம் தலைவர்கள் ரக்ஷா ராமையா, முகமது நல்பாட் ஈடுபட்டுள்ளனர்.அதிக ஓட்டுகர்நாடக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்த பின், கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது. அதிக ஓட்டுகள் பெற்ற ரக்ஷா ராமையா, தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பதவிக்கு போட்டியிட்ட முகமது நல்பாட், தலைவர் பதவி தனக்கே கொடுக்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்தார்.இளம் தலைவர்களுக்கு இடையிலான பனிப்போர், கட்சியில் சூறாவளியை கிளப்பியது.கட்சியின் முக்கிய தலைவர்கள் சேர்ந்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுப்பிடித்தனர். நடப்பாண்டு டிசம்பர் இறுதி வரை, ரக்ஷா ராமையா தலைவராக இருப்பார். அதன்பின் அப்பொறுப்பை முகமதி நல்பாட் ஏற்கும்படி, ஆலோசனை கூறி, சமாதானப்படுத்தினர்.தற்போது ரக்ஷா ராமையா, முகமது நல்பாட் மனஸ்தாபத்தை மறந்து, ஒன்று சேர்ந்துள்ளனர். கட்சி பணிகளிலும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். கட்சி அலுவலகத்திலும், ஒன்றாகவே காணப்படுகின்றனர்.டிசம்பர் இறுதி வரை, இளைஞர் காங்., தலைவராக இருக்க, தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தலைவர்களின் கவனத்தை தன் வசம் ஈர்க்கும் முயற்சியில், ரக்ஷா ராமையா இறங்கியுள்ளார்.இளைஞர் காங்கிரசின் இமேஜை அதிகரிப்பதுடன், பெருமளவில் இளைஞர்களை கட்சிக்கு இழுக்க, 'யுவ கர்நாடகா' என்ற பெயரில், திட்டம் வகுத்துள்ளார். விரைவில் திட்டம் துவங்கும்.ரக்ஷா ராமையா கூறியதாவது:இளைஞர் காங்கிரஸ் என்றால், போராட்டம், தர்ணா நடத்துவது என்ற மனப்போக்கை மாற்றவும், மக்களுக்கிடையே புதிய கருத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறோம்.உத்தியோக மேளா மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் 'உத்தியோக மேளா' நடத்தப்படும். கொரோனாவால் வேலையை இழந்தவர்களுக்கு, புதிதாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவும் நோக்கில், மேளா நடத்தப்படும்.தொழிற்சாலைகள், வேலை எதிர்ப்பார்ப்பவர்கள் இடையே, இளைஞர் காங்., பாலமாக செயல்படும். எனக்கு கிடைத்த பதவி காலத்தில், சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்பது, என் விருப்பம்.மாநில காங்., தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வழி காட்டுதலின்படி நடப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X