நாடு முழுதும் 10 ஆயிரம் விவசாய உற்பத்தி மையங்கள் ஆரம்பிக்க இலக்கு

Added : செப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கலபுரகி-''விவசாய உற்பத்திக்கும், பொருளாதார ரீதியான பின் தங்கியுள்ள விவசாயிகளுக்கு உதவவும், நாடு முழுதும் 10 ஆயிரம் விவசாய உற்பத்தி மையங்கள் ஆரம்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என மத்திய விவசாய துறை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.கலபுரகி பல்கலைக்கழகத்தில் மத்திய விவசாய துறை அமைச்சர் ஷோபா, பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.பின், அவர்

கலபுரகி-''விவசாய உற்பத்திக்கும், பொருளாதார ரீதியான பின் தங்கியுள்ள விவசாயிகளுக்கு உதவவும், நாடு முழுதும் 10 ஆயிரம் விவசாய உற்பத்தி மையங்கள் ஆரம்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என மத்திய விவசாய துறை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.கலபுரகி பல்கலைக்கழகத்தில் மத்திய விவசாய துறை அமைச்சர் ஷோபா, பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.பின், அவர் கூறியதாவது:மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைவதற்கு முன், விவசாய துறைக்கு, 23 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்த நாட்டுக்கு இது மிகவும் குறைவு.மோடி ஆட்சிக்கு வந்த பின், 1.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்திய விவசாயத்தை ஆராய, 8,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டன.காபி, சிவப்பு வெங்காயம், மிளகு விற்பனைக்கு சந்தை மையம் உருவாக்கியது போல், மற்ற விளை பயிர்களுக்கும் சந்தை மையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.விவசாய உற்பத்திக்கும், பொருளாதார ரீதியான பின் தங்கியுள்ள விவசாயிகளுக்கு உதவவும், நாடு முழுதும் 10 ஆயிரம் விவசாய உற்பத்தி மையங்கள் ஆரம்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-செப்-202109:08:06 IST Report Abuse
Loganathan Kuttuva கர்நாடகாவின் வடக்கு பகுதிகள் இப்பொழுது முன்னேற்றம் அடைகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X