மின்சாரம் வினியோக நிறுவனத்துக்கு, நஷ்டம் ஏற்படுத்திய மூன்று ஊழியர்கள், பணியிடை நீக்கம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு-''மின் கட்டண பில்லில், திருத்தம் செய்து பெஸ்காம் எனும், பெங்களூரு மின்சாரம் வினியோக நிறுவனத்துக்கு, நஷ்டம் ஏற்படுத்திய மூன்று ஊழியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,'' என மின்சாரத்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்தார்.பெங்களூரில் அவர், நேற்று கூறியதாவது:முல்பாகல் முணை மண்டல ஊழியர் மெஹபூப் பாஷா, இளைய உதவியாளர்கள் காயத்ரம்மா, சுஜாதம்மா

பெங்களூரு-''மின் கட்டண பில்லில், திருத்தம் செய்து பெஸ்காம் எனும், பெங்களூரு மின்சாரம் வினியோக நிறுவனத்துக்கு, நஷ்டம் ஏற்படுத்திய மூன்று ஊழியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,'' என மின்சாரத்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்தார்.பெங்களூரில் அவர், நேற்று கூறியதாவது:முல்பாகல் முணை மண்டல ஊழியர் மெஹபூப் பாஷா, இளைய உதவியாளர்கள் காயத்ரம்மா, சுஜாதம்மா ஆகியோர், மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு, மின் கட்டண பில் கொடுக்கும் போது, சில பில்களில் திருத்தம் செய்து, தொகையை குறைத்துள்ளனர். இதன் மூலம் பெஸ்காமுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினர்.இம்மூன்று ஊழியர்கள் மீது கோலார் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டுள்ளது. மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.என் துறையில் எந்த விதமான ஊழல் நடந்தாலும், சகித்துக்கொள்ள முடியாது. ஊழல் செய்து, துறைக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று ஊழியர்களிடம் துறை ரீதியில் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X