சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் துப்பாக்கியுடன் ரவுடி கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை:மதுரையில் பிரபல ரவுடி, கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். மதுரையில் கடந்த 2015ல் கமல் கருப்பு என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி 'பிள்ளையார்' கணேசனின் தம்பி பிரபுவை, தனிப்படை போலீசார் பிடித்தனர். அப்போது 2019ல் தன் அண்ணன் சிறைக்கு செல்லும்போது கைத் துப்பாக்கியை கூட்டாளி மதனிடம் கொடுத்து வைத்திருப்பதாக
 மதுரையில் துப்பாக்கியுடன் ரவுடி கைது

மதுரை:மதுரையில் பிரபல ரவுடி, கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் கடந்த 2015ல் கமல் கருப்பு என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி 'பிள்ளையார்' கணேசனின் தம்பி பிரபுவை, தனிப்படை போலீசார் பிடித்தனர். அப்போது 2019ல் தன் அண்ணன் சிறைக்கு செல்லும்போது கைத் துப்பாக்கியை கூட்டாளி மதனிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, மதுரை சிவரக்கோட்டையில் உள்ள மதன், 46, என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இவர் மீது ரவுடி சவுந்தர் என்பவரின் கொலை வழக்கு உள்ளது.


பின்னணி என்ன?

ரவுடிகள் பிள்ளையார் கணேசன், சவுந்தர், நேரு பாண்டி, அப்பள ராஜா ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்.இடப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட, இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர். இதில், 2015ல் அப்பள ராஜா கூட்டாளியான நேரு பாண்டி கொலை செய்யப்பட்டார். அன்று முதல் பழிக்குப் பழி வாங்க, இரு தரப்பிலும் மாறி மாறி கொலை நடந்து வருகிறது.

நேரு பாண்டியின் அக்கா மகன் தான் பிள்ளையார் கணேசன். இவர், தி.மு.க., முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே.குருசாமி தரப்புடன் 'கூட்டணி' வைத்தார்.பீஹாரில் இருந்து கைத்துப்பாக்கிகளை கள்ளத்தனமாக வாங்கி, தங்கள் பாதுகாப்புக்கு அவரவர் வைத்துக் கொண்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வி.கே.குருசாமியிடமும், அவரது உறவினரிடமும் இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது கணேசனின் துப்பாக்கி, மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X