பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை சிறையில் என்.ஐ.ஏ., அமைப்பினர் விசாரணை

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை சிறையில் என்.ஐ.ஏ., அமைப்பு புரோக்கர்கள் குறித்து விசாரணை நடத்தியது. இலங்கையில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல 23 இலங்கை தமிழர்கள் கடல் வழியாக துாத்துக்குடிக்கு வந்து மதுரை கப்பலுாரில் தங்கினர். அவர்களை ஜூன் 11ல் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். புரோக்கர்களாக செயல்பட்ட தினகரன், காசிவிஸ்வநாதன் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா மாநிலம் மங்களூருவில்

மதுரை:மதுரை சிறையில் என்.ஐ.ஏ., அமைப்பு புரோக்கர்கள் குறித்து விசாரணை நடத்தியது.

இலங்கையில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல 23 இலங்கை தமிழர்கள் கடல் வழியாக துாத்துக்குடிக்கு வந்து மதுரை கப்பலுாரில் தங்கினர். அவர்களை ஜூன் 11ல் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். புரோக்கர்களாக செயல்பட்ட தினகரன், காசிவிஸ்வநாதன் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இதேபோல் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. மதுரை வழக்கையும் விசாரிக்க உள்ளது. இதற்காக தினகரன், காசிவிஸ்வநாதனை காவலில் எடுக்க உள்ளது. அவர்களின் விபரங்கள் குறித்து மதுரை சிறை அதிகாரிகளிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X