பொது செய்தி

இந்தியா

பைக், 'டிவி' மற்றும் குளிர்சாதனப்பெட்டி வைத்துள்ளோரின் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு-'கர்நாடகாவில் பைக், 'டிவி' மற்றும் குளிர்சாதனப்பெட்டி வைத்துள்ளோரின் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது. இது வெறும் வதந்தி,' என உணவு, பொது வினியோகத்துறை தெரிவித்துள்ளது.உணவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:வீடுகளில் பைக், 'டிவி' மற்றும் குளிர்சாதன பெட்டி வைத்துள்ள குடும்பங்களின், பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படும் என, சில ஊடகங்களில் செய்தி

பெங்களூரு-'கர்நாடகாவில் பைக், 'டிவி' மற்றும் குளிர்சாதனப்பெட்டி வைத்துள்ளோரின் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது.

இது வெறும் வதந்தி,' என உணவு, பொது வினியோகத்துறை தெரிவித்துள்ளது.உணவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:வீடுகளில் பைக், 'டிவி' மற்றும் குளிர்சாதன பெட்டி வைத்துள்ள குடும்பங்களின், பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படும் என, சில ஊடகங்களில் செய்தி வெளியானது.இது ஆதாரமற்ற செய்தி, எந்த காரணத்தை கொண்டும், பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது.அரசு நிர்ணயித்த விதிமுறைகளுக்கு எதிராக, பி.பி.எல்., மற்றும் அந்த்யோதயா கார்டுகள் பெற்றிருந்தால், அது போன்ற கார்டுகள் ரத்து செய்யப்படும்.தகுதியற்றவர்கள், பி.பி.எல்., கார்டுகள் பெற்றிருந்தால், அந்த கார்டுகள், ஏ.பி.எல்., கார்டாக மாற்றப்படும்.வரி செலுத்துவோர், பி.பி.எல்., கார்டு வைத்திருக்கக்கூடாது. தகுதியானவர்களின் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது. ஒருவேளை ரத்து செய்திருந்தால், உணவுத்துறை அதிகாரிகள், தாசில்தார் அல்லது மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X