சவுதி அரேபியாவில் இறந்த கர்நாடகா நபரின் உடல், மூன்று வாரங்களுக்கு பின் சொந்த ஊர் வந்தது

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெலகாவி-சவுதி அரேபியாவில் இறந்த கர்நாடகா நபரின் உடல், மூன்று வாரங்களுக்கு பின் சொந்த ஊருக்கு வந்தது. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.விஜயபுரா சிந்தகி மாலகான் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் நவி, 34. இவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இரண்டு ஆண்டாக சவுதி அரேபியாவில் விவசாய நிலத்தில் தினக்கூலியாக பசவராஜ் நவி

பெலகாவி-சவுதி அரேபியாவில் இறந்த கர்நாடகா நபரின் உடல், மூன்று வாரங்களுக்கு பின் சொந்த ஊருக்கு வந்தது. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.விஜயபுரா சிந்தகி மாலகான் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் நவி, 34. இவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இரண்டு ஆண்டாக சவுதி அரேபியாவில் விவசாய நிலத்தில் தினக்கூலியாக பசவராஜ் நவி பணியாற்றினார்.ஆகஸ்ட் 12ல் இவர் தங்கியிருந்த அறையில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.சவுதி அரேபியாவில் வழக்கு பதிவானது. முதற்கட்ட விசாரணை முடிந்த பின் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.அவரது உடலில் காய அடையாளம் இருப்பதால் இது தற்கொலையல்ல; கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.அவரது சகோதரர் ஹனுமந்த நவி, நேற்று கூறியதாவது:இறுதி சடங்குகளுக்காக, பெட்டியிலிருந்து பசவராஜ் நவியின் உடலை வெளியே எடுத்த போது, அவரது உடலில் காய அடையாளங்கள் நிறைய இருந்தது.இது தற்கொலை இல்லை. கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தார்.அவருக்கு குடும்பத்திலோ, சவுதி அரேபியாவிலோ பணப்பிரச்னை உட்பட, எந்த பிரச்னையும் இருக்கவில்லை.இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன், தன் குடும்பத்தினருடன் பேசினார். ஆகஸ்ட் 26ல், ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார்.எங்கள் குடும்பத்துக்கு நியாயம் மற்றும் நிவாரணம் கிடைக்க அரசு உதவ வேண்டும். குடும்ப தலைவனை இழந்த பெண்ணுக்கு மூன்று பிள்ளைகளை வளர்ப்பது கஷ்டம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X