பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் அதிருப்தியில் சுகாதார செவிலியர்கள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை:தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயிப்பது, டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நிர்பந்திப்பதற்கு அதிருப்தி நிலவியது.தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது.மாநில தலைவர் பரமேஸ்வரி, பொது செயலர் ராணி, அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலர் செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் கூறியதாவது: கிராமங்களில் மாவட்ட
 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் அதிருப்தியில் சுகாதார செவிலியர்கள்

மதுரை:தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயிப்பது, டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நிர்பந்திப்பதற்கு அதிருப்தி நிலவியது.

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது.மாநில தலைவர் பரமேஸ்வரி, பொது செயலர் ராணி, அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலர் செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் கூறியதாவது: கிராமங்களில் மாவட்ட நிர்வாகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவு படி காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுகிறோம்.

ஆனால் இத்தனை பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யவும் செவிலியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்தி, அந்த விவரங்களை பதவிவேற்றம் செய்து வீட்டிற்குள் செல்ல இரவு ஆகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து செலுத்தவும் தற்போது சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாத விற்பனையாளர்கள், பணியாளர்களுக்கு செலுத்த சில மாவட்டங்களில் உத்தரவிடப்பட்டு உள்ளது. மதுக்கடைகளுக்கு செவிலியர்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,7 ல் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள், சுகாதார துணை இயக்குனர்களிடம் கடிதம் வழங்குவது, செப்.,8 முதல் 10 வரை கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது போன்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X