நெருங்கும் சபாநாயகர் ஓம் பிர்லா| Dinamalar

இந்தியா

நெருங்கும் சபாநாயகர் ஓம் பிர்லா

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (4)
Share
சமீபத்தில் தி.மு.க., லோக்சபா எம்.பி.,க்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக அழைத்து பேசியுள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா. இவர் சமீபத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று வந்தார். இதையடுத்து எம்.பி.,க்களை சந்தித்து 'அனைவரும் காஷ்மீர் சென்று வாருங்கள்' என கூறி வருகிறார். தி.மு.க., - எம்.பி.,க் களிடம் பேசியபோது, 'உங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீர்
 நெருங்கும் சபாநாயகர்  ஓம் பிர்லா

சமீபத்தில் தி.மு.க., லோக்சபா எம்.பி.,க்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக அழைத்து பேசியுள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா. இவர் சமீபத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று வந்தார். இதையடுத்து எம்.பி.,க்களை சந்தித்து 'அனைவரும் காஷ்மீர் சென்று வாருங்கள்' என கூறி வருகிறார்.


latest tamil news


தி.மு.க., - எம்.பி.,க் களிடம் பேசியபோது, 'உங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீர் மற்றும் லடாக் சென்று வாருங்கள். அனைத்து ஏற்பாடு களையும் லோக்சபா செயலகம் செய்து தரும்' என கூறியுள்ளார் ஓம்பிர்லா.'எதற்கு இவர் தி.மு.க., - எம்.பி.,க்களிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X