பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா 3வது அலையை தடுக்கலாம் உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவால்

Added : செப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கூடலுார்:''கொரோனா மூன்றாவது அலை வரும் என உறுதி செய்யப்படவில்லை; வராமல் இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி யாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சவுமியா சுவாமிநாதன். நீலகிரி மாவட்டம் வந்துள்ள அவர், நேற்று
 கொரோனா 3வது அலையை தடுக்கலாம் உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவால்

கூடலுார்:''கொரோனா மூன்றாவது அலை வரும் என உறுதி செய்யப்படவில்லை; வராமல் இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி யாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சவுமியா சுவாமிநாதன். நீலகிரி மாவட்டம் வந்துள்ள அவர், நேற்று குன்னுார் எடப்பள்ளி, முதுமலை, ஆனைகட்டியில் உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்தார்.


நடவடிக்கை

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.தமிழகத்திலும் தொற்று குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டுள்ளது. அனைவரும் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். மூன்றாவது அலை வரும் என எங்கும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், வராமல் இருக்க நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம்.கேரளாவில், 'டெல்டா' வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


பாதிப்பு இருக்காது



நீலகிரி போன்ற பகுதி களில், 'ஆன்லைன்' வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. எனவே, பள்ளிகளை திறப்பது அவசியம். மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-202101:15:48 IST Report Abuse
Gopalakrishnan S இவர் ஆரியர், வந்தேறி !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X