பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்

Added : செப் 05, 2021
Share
Advertisement
காரைக்குடி:''தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து, விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும்,'' என, இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.காரைக்குடி அருகே சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சவுமியமூர்த்தி தொண்டைமான் வளாக திறப்பு விழா நடந்தது. இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்றார். அமைச்சர்

காரைக்குடி:''தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து, விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும்,'' என, இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சவுமியமூர்த்தி தொண்டைமான் வளாக திறப்பு விழா நடந்தது. இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்றார். அமைச்சர் கூறியதாவது;

தமிழக முதல்வர் இலங்கை அகதி என்ற வார்த்தையை நீக்கி, மறுவாழ்வு மையம் என மாற்றம் செய்ததை வரவேற்கிறேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு, 317 கோடி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்ததக்கது. இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு சிறப்பாக உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X