கேரளாவில் கொரோனாவால் ஒரே நாளில் 29,682 பேர் பாதிப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 29,682 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தையும், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 6 லட்சத்தையும் கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 1,69,237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,682 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 17.54 ஆக இருந்தது. 25,910 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 29,682 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தையும், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 6 லட்சத்தையும் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,69,237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,682 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 17.54 ஆக இருந்தது. 25,910 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். சில நாட்களில் கொரோனாவால் 142 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 21,422 ஆக அதிகரித்தது.ஆக.,28 ல் மருத்துவமனைகளில் 2,04,896 பேர் சிகிச்சையிலும், 5,14,031பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் இருந்தனர். இது முறையே நேற்று 2,50,065ம் 6,03,968 என அதிகரித்தது.

திருச்சூர் மாவட்டத்தில் 3474,

எர்ணாகுளம் 3456,

மலப்புரம் 3166,

கோழிக்கோடு 2950,

பாலக்காடு 2781,

கொல்லம் 2381,

திருவனந்தபுரம் 2314,

கோட்டயம் 2080,

ஆலப்புழா 1898,

கண்ணுார் 1562,

பத்தனம்திட்டா 1154,

இடுக்கி 1064,

வயநாடு 923,

காசர்கோட்டில் 479 பாதிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆயிரத்தை கடந்த நிலையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X