சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் புதைக்கப்பட்ட பெண் உடல் நெருங்கிப் பழகியவர் 'எஸ்கேப்'

Added : செப் 05, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் பணிக்கன்குடியில் மூன்று வாரங்களுக்கு முன் மாயமான சிந்து 45, என்பவரின் உடல் அவருடன் நெருங்கி பழகிய பினோய் என்பவரது வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் தலைமறைவானார்.கணவரை விட்டு பிரிந்த சிந்து ஐந்து ஆண்டாக பணிக்கன்குடியில் வாடகை வீட்டில் வசித்தார். அங்கு மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்த பினோய்

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் பணிக்கன்குடியில் மூன்று வாரங்களுக்கு முன் மாயமான சிந்து 45, என்பவரின் உடல் அவருடன் நெருங்கி பழகிய பினோய் என்பவரது வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் தலைமறைவானார்.

கணவரை விட்டு பிரிந்த சிந்து ஐந்து ஆண்டாக பணிக்கன்குடியில் வாடகை வீட்டில் வசித்தார். அங்கு மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்த பினோய் என்பவருடன் நெருங்கி பழகினர். இதனிடையே அவர் ஆக.12ல் மாயமானதால் அவரது மகள் வெள்ளத்துாவல் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் பினோய் மாயமானார்.அவரது வீட்டை சிந்துவின் உறவினர்கள் சோதனையிட்டபோது சமையலறையில் குழி தோண்டிய அடையாளங்கள் தெரிந்தது. அதை தோண்டிய போது அதில் சிந்துவின் உடல் புதைக்கப்பட்டது தெரிந்தது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் பினோயை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X