கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து, அரசு அலுவலர் மற்றும் எஸ்டேட்டில் பணிபுரிந்த ஊழியரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில், 2017- ஏப்., 24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர், 50 கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில், கார் விபத்தில் உயிரிழந்தார்.
கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. போலீஸ் தனிப்படையினர் பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் நேற்று முன்தினம் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், அரசு அலுவலர் ஒருவர் மற்றும் எஸ்டேட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அவர்களிடம் விசாரணை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE