சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை இணையதளத்தில் தவறாக பதிவிட்ட வாலிபரை கொல்ல முயற்சி: தம்பி உட்பட 2 பேர் கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
எரியோடு:எரியோடு கல்லுாரி மாணவியை வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டு பிரச்னை செய்த 'மாஜி' காதலனை திட்டமிட்டு வரவழைத்து கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக மாணவியின் தம்பி, தாய் மாமன் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.புதுக்கோட்டை கருதனம்பட்டியை சேர்ந்த 23 வயது மாணவி கொடைக்கானல் கல்லுாரியில் முதுகலை பட்டம் படிக்கிறார். இவருடன்

எரியோடு:எரியோடு கல்லுாரி மாணவியை வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டு பிரச்னை செய்த 'மாஜி' காதலனை திட்டமிட்டு வரவழைத்து கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக மாணவியின் தம்பி, தாய் மாமன் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.புதுக்கோட்டை கருதனம்பட்டியை சேர்ந்த 23 வயது மாணவி கொடைக்கானல் கல்லுாரியில் முதுகலை பட்டம் படிக்கிறார். இவருடன் வலைத்தளம் மூலம் சேலம் மாவட்டம்ஆத்துார் நரசிங்கபுரம்மேகநாதன் 29, பழகி காதலர்களாகினர்.ஒருகட்டத்தில் மாணவி அவரிடம் இருந்து விலகினார்.

பெற்றோர் மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்த நிலையில், அவர் தொடர்பான வீடியோ, படங்களை திரித்து கருதனம்பட்டியில் பலருக்கும் மேகநாதன் அனுப்பியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவி குடும்பத்தினர் மேகநாதனை நேற்றுமுன்தினம் இரவு கருதனம்பட்டிக்கு வரவழைத்தனர்.

ஊருக்குள் வந்த மேகநாதனை மாணவியின் தம்பி உள்ளிட்ட சிலர் தாக்கி, கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். எரியோடு போலீசார் மாணவி, அவரது தந்தை, தம்பி, தாய்மாமன் , மீது வழக்கு பதிந்தனர். தம்பி, தாய்மாமன் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X