பொது செய்தி

இந்தியா

தலைமை நீதிபதி ரமணாவுக்கு சொலிசிட்டர் ஜெனரல் புகழாரம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரமணா, ஒரு சிறந்த நீதிபதி மட்டும் அல்ல; ஒரு நல்ல மனிதரும் கூட,” என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புகழாரம் சூட்டி உள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாரபட்சம்விழாவில், தலைமை நீதிபதி ரமணா, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண்

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரமணா, ஒரு சிறந்த நீதிபதி மட்டும் அல்ல; ஒரு நல்ல மனிதரும் கூட,” என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புகழாரம் சூட்டி உள்ளார்.



latest tamil news



உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாரபட்சம்விழாவில், தலைமை நீதிபதி ரமணா, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இதில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசியதாவது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரமணா, சிறந்த நீதிபதியாக மட்டும் அல்ல; ஒரு நல்ல மனிதராகவும் அவரை எனக்கு நன்றாக தெரியும். அவர் கடவுளைப் பார்த்து அஞ்சுபவர் அல்ல; கடவுளை நேசிப்பவர். சட்டத் துறையில் புத்திசாலியாக விளங்கும் இவர், எதிலும் பாரபட்சம் பார்க்காமல் செயல்படுவார்.

தலைமை நீதிபதியின் சேவையை பாராட்டுவதற்கான விழா இது. எனினும், இந்திய பார் கவுன்சில் தலைவர் மிஷ்ரா, என்னிடம் அளித்த உரையில் கொரோனா வைரஸ் காலத்தில் வழக்கறிஞர்களுக்கு ஏற்பட்ட குறைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.வழக்கறிஞர்களாகிய நாம், நீதிமன்றம், அரங்கம் என எந்த இடத்தில் இருந்தாலும், நிவாரணம் வழங்க கோரிக்கை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.பரிசீலனைஎனினும், இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும்படி தலைமை நீதிபதியிடம் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




அமைச்சரிடம் வலியுறுத்தல்

நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி உயர்வு வழங்க 68 பெயர்களை பரிந்துரை செய்துள்ளதாகவும், அந்த பரிந்துரைகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கும்படியும், விழாவுக்கு வந்திருந்த மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் வலியுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
05-செப்-202110:32:15 IST Report Abuse
M  Ramachandran அதான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதே
Rate this:
Cancel
05-செப்-202110:02:29 IST Report Abuse
தமிழ் குடிமகன் எவ்வளவு நல்லவர்கள் இருந்தாலும், நீதி என்ற ஒன்று இங்கே கிடையாது. பாமரனுக்கு தான் சட்டம், பணக்காரனுக்கு சட்டமே கிடையாது, நீதித்துறை என்று ஒன்று இருப்பதிலே எந்த பிரயோஜமும் இல்லை !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X