சுருக்குமடி வலைக்கு எதிராக 6 மாவட்ட மீனவர்கள் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுருக்குமடி வலைக்கு எதிராக 6 மாவட்ட மீனவர்கள் தீர்மானம்

Added : செப் 05, 2021
Share
மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் நடைபெற்ற ஆறு மாவட்ட மீனவக் கிராமங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக படகுகளை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் சுருக்குமடி வலைக்கு எதிரான 6 மாவட்ட மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, நாகை,
 சுருக்குமடி வலைக்கு எதிராக 6 மாவட்ட மீனவர்கள் தீர்மானம்

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் நடைபெற்ற ஆறு மாவட்ட மீனவக் கிராமங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக படகுகளை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் சுருக்குமடி வலைக்கு எதிரான 6 மாவட்ட மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலுார், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 63 மீனவக் கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி நிர்வாகிகள் தலைமையில், நாகை அக்கரைபேட்டை கிராம நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது., கூட்டத்தில் சுருக்குமடி வலைக்கு எதிராக பல்வேறு மீனவ கிராம நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை மற்றும் அதிவேக இன்ஜின்களை பயன்படுத்தும் விசைப்படகுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சென்னைக்கு சென்று தமிழக முதல்வர், மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனுவாக அளிக்கப்படும்.

நாகையில் மாநில அளவிலான சுருக்குமடி வலைக்கு எதிரான கிராம நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை முன்னிட்டு ஏ.டி.எஸ்.பி கார்த்திக் தலைமையில் 371 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X