ஜிப்மரில் 'சர்வர்' முடக்கம் 'ஹேக்கர்'கள் கைவரிசையா

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், இணையதள 'சர்வர்' திடீரென முடங்கியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.நேற்று காலை 8:௦௦ மணி முதல் திடீரென, வைரஸ் ஊடுருவல் காரணமாக, இணையதள 'சர்வர்' முற்றிலும் முடங்கியது. அதனால், ஒரு துறையில் இருந்து பிற துறைக்கு தகவல் கிடைக்காமல், அனைத்து பிரிவுகளும் ஸ்தம்பித்தன. ஜிப்மரின் இணையதளமும்

புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், இணையதள 'சர்வர்' திடீரென முடங்கியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நேற்று காலை 8:௦௦ மணி முதல் திடீரென, வைரஸ் ஊடுருவல் காரணமாக, இணையதள 'சர்வர்' முற்றிலும் முடங்கியது. அதனால், ஒரு துறையில் இருந்து பிற துறைக்கு தகவல் கிடைக்காமல், அனைத்து பிரிவுகளும் ஸ்தம்பித்தன. ஜிப்மரின் இணையதளமும் முடங்கியது.இதன் பின்னணியில் சர்வதேச ஹேக்கர்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் டாக்டர்கள், 'டெலிமெடிசின்' எனப்படும் தொலை மருத்துவ சேவை மூலம், மருத்துவ ஆலோசனை வழங்கி வருகின்றனர். 'சர்வர்' முடக்கம் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை டெலிமெடிசின் சேவை நிறுத்தப்படுவதாக, ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X