பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரம் அதிகரிக்க எளிய வழி

Added : செப் 05, 2021
Share
Advertisement
இணையதளங்களை எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைப்பது ஒரு கலை. அந்த கலையை ஜிலிங்கோ டிரேடு (ZilingoTrade) கற்றிருக்கிறது. இவர்களின் ஆன்லைன் சேவைகளை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்கின்றனர்.வணிகத் தேவைகளுக்கு இது 'ஓன் ஸ்டாப்' இணையதளம். மொத்த விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், தொழிற்சாலைகள் என வணிகத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைனில் கொண்டு வருவதே இத்தளத்தின்

இணையதளங்களை எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைப்பது ஒரு கலை. அந்த கலையை ஜிலிங்கோ டிரேடு (ZilingoTrade) கற்றிருக்கிறது. இவர்களின் ஆன்லைன் சேவைகளை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்கின்றனர்.

வணிகத் தேவைகளுக்கு இது 'ஓன் ஸ்டாப்' இணையதளம். மொத்த விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், தொழிற்சாலைகள் என வணிகத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைனில் கொண்டு வருவதே இத்தளத்தின் நோக்கம்.இது நம் தேசத்தில்வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் ஒன்று. விரைவில் 7500 கோடி மதிப்புள்ள 'யூனிகார்ன்' நிறுவனமாகமாறும் என்கிறதுசமீபத்திய ஆய்வு.


மொத்த விலை...

சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து ஆலைகளின் விலையில் மொத்த விலையில் பல்வேறு வகை ஆடை, துணி, நுால் ஆகியவை வாங்குவதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப் படுகிறது. 200-க்கும் அதிகமான ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிற்சாலை வினியோகஸ்தர்கள் இதில் இருக்கின்றனர். ஆர்டர் செய்த பின் இந்த இணையதளத்தின் வாயிலாக ஒரே டாஷ் போர்டில் இருந்து ஆர்டரை தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணிக்க முடியும்.சில்லறை வியாபாரிகளும் இதன் வாயிலாக ஆடை வாங்கலாம்.

அப்படி வாங்கும் போது குறைந்தபட்சம் 3 முதல் 5 வரை ஆர்டர் கொடுக்க வேண்டும். 4000த்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை தேர்வு செய்ய இயலும்.உற்பத்தி செய்யும் ஆடை, துணி, நுால் ஆகியவற்றையும் இத்தளம் வாயிலாக விற்கமுடியும். அப்படி விற்கும் போது நாடு முழுவதும் இருந்து ஆர்டர்கள் கிடைக்கவும், மேலும் உலகளவில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கவும் வழிவகை செய்கிறது. இதுவரை 6000ம் விற்பனையாளர்கள் இந்த இணைய தளத்தில் பதிவுசெய்துள்ளனர்.பதிவு செய்ய வேண்டிய இணைய பக்கம்:https: //zilingotrade.com/en-in/sellonzilingotrade


எந்தெந்த நாடுகள்

குறிப்பாக அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின், ஐக்கிய அரபு நாடுகள், லெபனான், ஆஸ்திரேலிய வர்த்தகர்களிடம் வியாபாரத் தொடர்புகள் உள்ளன. இவர்களின் விற்பனையாளர்கள் பெரும்பாலும் வங்கதேசம், இலங்கை, வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருக்கின்றனர்.

இணையதளம் www.zilingotrade.com

சந்தேகங்களுக்கு:இ--மெயில்: sethuraman.sathappan@gmail.com,

இணையதளம்:www start upandbusinessnews. com

அலைபேசி98204 51259

- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X