பாலியல் தொழிலாளர்களை கொல்லத் துடிக்கும் தாலிபான்கள்

Updated : செப் 07, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
காபூல்: பழமைவாதிகளான தலிபான்கள், ஆப்கனில் உள்ள பாலியல் தொழிலாளர்களை கொலை செய்ய பட்டியல் தயாரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. அதேசமயம் இத்தொழில் செய்வோரை தண்டிக்கும் சட்டம் எதுவும் இல்லை என்பதால், தலைநகர் காபூலில் நுாற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம்

காபூல்: பழமைவாதிகளான தலிபான்கள், ஆப்கனில் உள்ள பாலியல் தொழிலாளர்களை கொலை செய்ய பட்டியல் தயாரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கனில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. அதேசமயம் இத்தொழில் செய்வோரை தண்டிக்கும் சட்டம் எதுவும் இல்லை என்பதால், தலைநகர் காபூலில் நுாற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.



latest tamil news


இந்நிலையில் ஆப்கனை மீண்டும் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு ஆபாச வலைதளங்களில் இடம்பெற்றுள்ள ஆப்கன் பெண்களின் படங்களைத் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


'நிக்கா'


மேலும், வலைதளத்தில் காணப்படும் பாலியல் தொழில் செய்யும் ஆப்கன் பெண்களின் பட்டியலை, தலிபான் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. பட்டியலில் உள்ள பெண்களை கைது செய்து கூட்டு பலாத்காரத்திற்குப் பின் பொது இடத்தில் கழுத்தை வெட்டுவது, துாக்கிலிடுவது அல்லது கல்லால் அடித்து கொலை செய்வது தலிபான்களின் வழக்கம். இதனால் காபூலில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

ஏற்கனவே தலிபான், பகுதி வாரியாக உள்ள இமாம்களுக்கு 15 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட விதவைகளின் பட்டியலை தயாரிக்கச் சொல்லி உத்தரவிட்டு உள்ளது. தலிபான் படையினருக்கு 'நிக்கா' எனப்படும் திருமணம் செய்து வைக்க இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


latest tamil news



போகப் போகத் தெரியும்


ஆப்கனில் பெண்கள், ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதனால் ஏராளமான பெண்கள் உயிருக்கு அஞ்சி வேலைக்கு செல்லா மல் வீட்டில் முடங்கிஉள்ளனர்.

கடந்த 1996 - 2001ல் ஆப்கனை தலிபான் ஆண்ட போது பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டது. தலிபான் கட்டளையை மீறும் பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு துாக்கிலிடப்பட்டனர். இந்த முறை பெண்களுக்கு உரிய உரிமை வழங்கப்படும் என, தலிபான் அமைப்பு உறுதி அளித்துள்ளது. இந்த உறுதிமொழி காப்பற்றப்படுமா அல்லது காற்றில் பறக்க விடப்படுமா என்பது போகப் போகத் தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
09-செப்-202116:17:58 IST Report Abuse
தஞ்சை மன்னர் வடிவேலு மைண்ட் வாய்ஸ் "ஐயோ போதும் போதும் லிஸ்டு பெருசா போகுது" உதார் விடுவதற்கும் ஒரு அளவு இருக்குல்ல
Rate this:
Cancel
Jay - SFO,யூ.எஸ்.ஏ
07-செப்-202123:05:52 IST Report Abuse
Jay ஆனால் இங்கு வசதியாக உட்கார்ந்துகொண்டு புகார் வாசிக்கும் இஸ்லாமியர்களுக்காகவே அவர்களின் பொன்னான தாலிபான் ஆட்சி தமிழ் நாட்டில் வரணும். அப்பறம் பாருங்க இந்த மத பற்றுதல் கொண்ட பாயிங்க... எல்லாம் சௌகரியமாக உட்கார்ந்துகொண்டு நோட்டை சொல்லும் இழிபிறவிகள். முடிந்தால் உங்கள் பெண் பிள்ளைகளை அங்கு அனுப்பி வசதியாக வைத்திருங்கள் பார்க்கலாம். இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றால், ஹிந்து என்ற ஒரு முதல் இல்லை என்றால் இங்குள்ள முஸ்லீம் பெண்கள் எல்லாம் பெரும்பாலும் பல ஆண்களால் கர்பமாக்கப்பட்டிருப்பார்கள். கேட்டால் இது இஸ்லாம் இல்லை என்று சப்பைக்கட்டு. இல்லையென்றால் ஏன் கண்டனக்குரல் வெளிவரவே இல்லை. அது உள்நாட்டு பிரச்சனையை, ஆனால் அர்மேனியா சண்டையை ஆதரிக்கும்போது அது உள்நாட்டு பிரச்சனையாக தெரியாது.... கேவலம்.
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-செப்-202112:35:14 IST Report Abuse
தஞ்சை மன்னர் அப்படி பார்த்தால் ஹிந்துக்கள் எல்லாம் கைலாச நாட்டுக்கு போக சொல்லுவார் போல ஜெ அப்படி சொல்லத்தோன்றுவது போல இருக்கு இவ்வருடைய கருத்து , இந்திய முஸ்லிம்களுக்கும் சொந்தம் முதலில் அதை புரிந்து கொண்டு பேசுங்கள் இல்லாட்டி மீண்டும் ஒரு பிரிவினைதான் தீர்வாக ஆகிவிடும்...
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
07-செப்-202115:33:27 IST Report Abuse
vijay //..கைது செய்து கூட்டு பலாத்காரத்திற்குப் பின் பொது...// அப்புறம் இந்த செயலை செய்யும் தாலிபான்களை கொன்று தண்டிப்பது யார்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X