ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா அஞ்சலி

Added : செப் 05, 2021
Share
சென்னை:ஜெயலலிதா கருணாநிதி நினைவிடங்களில் 'பாலிவுட்' நடிகை கங்கனா ரணாவத் நேற்று அஞ்சலி செலுத்தினார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். செப்.10ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். நடிகர்
 ஜெயலலிதா நினைவிடத்தில்  நடிகை கங்கனா அஞ்சலி

சென்னை:ஜெயலலிதா கருணாநிதி நினைவிடங்களில் 'பாலிவுட்' நடிகை கங்கனா ரணாவத் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். செப்.10ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.

நடிகர் அரவிந்தசாமி எம்.ஜி.ஆராக நடித்துள்ளார்.இந்நிலையில் 'தலைவி' படத்தின் விளம்பரத்திற்காக சென்னை வந்த கங்கனா ரணாவத் மெரினாவில் உள்ள ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X